Sunday, 19 March 2017

போராடித்தான் பாப்போமே...

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

போராடித்தான் பாப்போமே...

Thursday, 16 March 2017

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

💎காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.

💎பொங்குற காலத்தில் புளி. மங்குற காலம் மாங்கா
.
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

💎எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல.

💎தன் காயம் காக்க வெங்காயம் போதும்

💎வாழை வாழ வைக்கும்

💎அவசர சோறு ஆபத்து

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

💎சித்தம் தெளிய வில்வம்

💎சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி, சூட்டை தணிக்க கருணை கிழங்கு

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்

"உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்"

நிலவேம்பு - Andrographis paniculata

 Scientific name: Andrographis Paniculata
Tmail: Siriyaa Nangai [சிறியா நங்கை], நிலவேம்பு
English: Green Chirayta

https://en.wikipedia.org/wiki/Andrographis_paniculata

காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோய் பூரண குணம் !!!


ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis Paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

மனஅழுத்தம் - மனவியல் ரீதியிலான தீர்வு.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.

Wednesday, 15 March 2017

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.

காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் - சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.

 உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.

 இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

Tuesday, 14 March 2017

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 வாய்ககால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....👇👇👇

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்-
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை  ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!
ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

A Good Read !

A Good Read!

*'நாம சாப்பிட  ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட  உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும்  நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை  நாம கழிச்சிருக்கோம்' னு...

#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது... 😊

Monday, 13 March 2017

தியானம் என்றால் என்ன ?

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்.
அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல
முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது, சிறுவன் பகவானை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.

தியானம் என்றால் என்ன?
பகவான்: சிரித்துக் கொண்டே அந்தச்
சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம்,
"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.

அதே மாதிரி
எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.

சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

சிறுவன் மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.

சிறுவனைச்
சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் பகவான்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன்
பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே
மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை.
தோசையோ சிறுத்து ஒரு சிறு
விள்ளலாக மாறியிருந்தது இப்போது.
சிறுவனும் அந்த விள்ளலில் கையை
வைத்தபடி
எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ,
அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்,

அடிநாதமாக இறைவன் மேல்
கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்.


புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.
கதை முடிந்தது.

பகவான் ஸ்ரீ ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும்,
சாவும் எனவும்,


இடைப்பட்ட காலத்தின் நேரமே தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.  அதில் பக்குவமுறும் காலமே வேறுபடுகிறது.

Wednesday, 8 March 2017

கலியின் ஆரம்பம், இந்த குதிரை விற்பனைக்கு அல்ல...

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை.

 பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள்.
 மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரம் நெருங்கிய நேரத்தில்.....

 குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார்.

அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது.

 பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக மச்சம், கம்பீரமான நடை

 என்று ஒரு குதிரை,

 சந்தைக்கு வந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள்!

எல்லோரும் அந்த குதிரையின் அழகில் மயங்கி,

 "எவ்வளவு அழகான குதிரை, இதன் விலையும் அதிகமாகத்தான் இருக்கும்" என்று சொல்லி ஒதுங்கி விட்டார்கள்.

 அப்போது.....

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ,

 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

 ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

 இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

  துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

 நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள்.

 "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்.....

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்...

கலியின் ஆரம்பம்.

Friday, 3 March 2017

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் அடையாளம்


A
உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள்.

அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள்.

மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள்.

வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும்.

அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள்.

உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.


B

உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சி பூர்வமானவர்களாக இருப்பீர்கள்.

நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள்.

உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள்.

உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள்.

அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


C

உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள்.

மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள்.

இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.


D

உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள்.

தொழில் புரிய பிறந்தவர் நீங்கள்.

சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள்.

நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.


E

உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள்.

மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.

காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள்.

காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.


F

உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள்.

பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.

நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.


G

உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள்.

புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள்.

வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள்.

மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள்.

உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள்.

உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.


H

உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள்.

புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து.

சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.


I

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள்.

மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள்.

அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள்.

ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.


J

J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும்.

உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள்.

உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.


K

உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள்.

நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள்.

சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள்.

வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.

நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

L

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள்.

அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள்.

தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.


M

M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும்.

உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள்.

அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.


N

N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும்.

துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும்.

அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.


O

அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள்.

ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள்.

உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.


P

உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.

படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பத தெரியும்.

உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.


Q

Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள்.

பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும்.

அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும்.

ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.


R

உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள்.

சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள்.

அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.


S

S என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும்.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள்.

புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள்.

நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது.

சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.


T

உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது.

உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும்.

மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.


U


உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள்.

எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள்.

அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.


V

உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள்.

உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள்.

ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள்.

இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.


W

உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள்.

ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள்.

அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும்.

வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.


X

உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம்.

ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள்.

இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.


Y

சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து.

Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள்.

எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.

செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள்.

சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.


z

உங்கள் பெயர் Z என்ற எழ தொடங்கினால்,

இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது.

இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும்.

இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள்.

மகிழ்ச்சி உங்களை தேடி வரும்

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.

அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்
ஒரு 🎈🎈
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில்
எழுதி முடித்தவுடன் ,

அதை இன்னொரு
அறையில் நிரப்ப
சொன்னார்.

இப்பொழுது
அந்த பேச்சாளர்,
 உங்கள் பெயர் எழுதிய
பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து
அந்த
அறைக்குள் ஓடிச் சென்று
ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து
தேடினர் .

 ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே
விழுந்து

தங்கள் பெயருக்குரிய 🎈பலூன்
கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.
5 நிமிடம் கடந்த போதிலும்
 ஒருவராலும்
தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,

’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும்
எடுங்கள்,
அந்த பலூனில் 🎈யார்
பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள்’
என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்
எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும்
கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’இது தான்
வாழ்க்கை.

எல்லோரும்
மகிழ்ச்சியை தேடுகிறோம்,

ஆனால்
அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும்
என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.

அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.