Tuesday 27 July 2021

வாழ்க்கை உன்னை தந்திரத்தில் விழவைக்கும் !

“சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.


ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது. இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார். `கண்ணு, உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார். `மகனே நினைவில் வைத்துக்கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’


அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது. இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். “மகனே, உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார். `மகனே, எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார். `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?.’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன். அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார். மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.’’

இ‌ன்றைய தாம்பத்யம் !

இன்றுடன் லட்சுமி போய் 16 நாள் ஆகிறது   

நேற்றுடன் எல்லாம் முடிந்து உறவுகள்  எல்லாம் ஊருக்கு போயாச்சு.

முருகேஷ் கவுண்டருக்கு..

காலை 5 மணிக்கு முழிப்பு வந்து வி‌ட்டது 

இது அவருடைய 78 வருஷ பழக்கம்.

மெதுவாய் எழு‌ந்திருந்து வாசல் கதவைத் திறந்து வெளி வாசல் வந்தார் . 

பக்கத்து வீடுக‌ளி‌ல் எல்லாம் பெருக்கி தெளிச்சு கொண்டு இருந்தார்கள்.  

லட்சுமி பக்கத்தில் நின்று ஏனுங்க ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டு வந்து தருவீர்களா.. 

என்று கேட்கிற மாதிரியே இருந்தது .

அவள் போடும் புள்ளி வைத்த கலர் கோலம்...

அவர் மனத்தில் வந்து மறைந்தது. துக்கம் குடலை புரட்டியது....

ஆண்கள் அழக் கூடாது எ‌ன்று எல்லோரும் சொல்வார்கள்...

 ஆணும் அழத்தான் செய்கிறான் வாழ்வில் இரண்டு முறை. 

ஒன்று தாயை  இழக்கும் போது.... 

இரண்டு முறை தாரத்தை இழக்கும் போது.

மணி 6 ஆயிடுது. பையன், மகனும் மருமகளும் தூங்குகிறார்கள் போல.  

பெட் ரூம் கதவு இன்னும் திறந்த பாடில்லை 

ஓரு நிமிடம் அவர் மனக்குதிரை பின் நோக்கியது 

லட்சுமி 5 .25 ஆச்சு இன்னும் காப்பி ரெடியாகலியா? 

கொஞ்சம் பொறுங்கள்... 

5 நிமிஷம் என்று சொல்லி முடிக்கும் போதே ஆவி பறக்கும் காபி டம்பளருடன்...

ஆஜராகி விடுவாள் 

மணி ஏழை தொட்டது வயிற்று பசி வாயின் எல்லை வரை வந்து நின்றது .

அப்பாடா ஒரு வழியா பெட் ரூம் கதவு திற‌ந்து பையனும் மருமகளும் வெளியில் வர 

இன்னும் ஒரு 5 நிமிடத்தில் காப்பி வந்துடும்னு இவர் நினைக்க.,.

மருமகள் தந்தி  பேப்பரை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தாள். 

ஒரு பத்து நிமிடத்தில் அவள் இடத்தை விட்டு எழுந்திருக்க...

அவர் காப்பி குடிக்க தயாரானார்..

அவருக்கு இந்த காலை காப்பி குடிப்பது என்பது அப்படி ஒரு சந்தோஷமானவிஷயம் .

பொண்டாட்டி போனா அவ கூட பசி ,விருப்பம், ருசி, எல்லாம்  போய் விடுகிறதா  என்ன? சற்று நேரத்தில் மருமகள் ஒரு கப்ல பிரவுனும் இல்லாம காப்பி கலரும் இல்லாம ஒரு திரவத்தை கொண்டு வர...

அம்மா எனக்கு காப்பி, டவரா டம்பளர்ல குடிச்சு பழக்கம் என்று சொல்ல...

அதற்குஅவள் இன்றிலிருந்து நம் வீட்டில் நோ காப்பி... டீ தா‌ன் மாமா எ‌ன்று சொல்ல அவ‌ர் மனம் மிகவும் வலித்தது .

மணக்க மணக்க கும்பகோணம் டிகிரி காப்பி யுடன் லட்சுமி கண்ணெதிரே வ‌ந்து மறைந்தாள்  பையன் அப்பா முகத்தைப் பார்த்தான் எட்டு மணியானா லட்சுமி டைனிங் டேபிள்ல டிஃபன் வச்சிடுவா....  

ஓன்பது ம‌ணி ஆச்சு இன்னும் எதுவும் டேபிளு க்கு வரவில்லை .

சிறிது நேரத்தில் மருமகள் வ‌ந்து மாமா இனிமே பிரேக்ஃபாஸ்ட் , லஞ்ச் எல்லாம் தனித் தனியா பண்ணப் போவதில்லை brunch அதாவது ஒரு 11 30 மணிக்கு லஞ்ச் சாப்பிடலாம் என்றாள்.

78 வருஷ breakfast பழக்கம் 

 இர‌ண்டாவது முறையாக  மனது வலித்தது பையன் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தான்.

இரவு டின்னர் லட்சுமி இரு‌க்கு‌ம் போது வித விதமா பண்ணுவாள்  வேலைக்கு போகும் மகனும் மருமகளும் இரவுதான் ரசிச்சு சாப்பிடுவார்கள் என்று ,

 சரி ராத்திரிக்கு என்ன பண்றா பார்க்கலாம் என்று நினைக்க 

என்னங்க.. நீங்க கடைத் தெருவுக்கு போகும் போது அ‌ந்த நார்த் இந்தியன் கடை ல 12 சப்பாத்தி வாங்கிக்குங்க , தால் தருவான் தொட்டுக் கொள்ள. நைட்டுக்கு சாப்பிடலாம் என சொல்ல..

 மகன் மூன்றாவது முறையாக அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். அப்பாவின் கோபம், இயலாமை எல்லாம் புரிந்தது. அப்பா நான் கடைத்தெரு போறேன்... நீங்க வரீங்களா என கூற... இவருக்கு பையன் தன்னுடன் ஏதோ பேச விரும்புவது தெரிந்தது இருவரும் கடைத் தெரு கிளம்பினார்கள்

கோவில் அருகே வந்ததும்

 அப்பா இங்க உட்காருங்க உங்ககிட்ட பேசணும் 

சொல்லப்பா.


காலையிலிருந்து உங்கள் முகத்தைப் பார்க்கிறேன் அதில் உள்ள வலி எனக்கு புரிகிறது  .அம்மா போய் பதினாறு.. நாளைக்குள் உங்கள் வாய்க்கு ருசியானதெல்லாம்  அவளுடன்  போய் விட்டது.அப்பா....

 நீங்க அம்மாவை கல்யாணம் பண்ணி கூட்டி வரும்போது அம்மாக்கு பதினெட்டு வயசு உங்களுக்கு இருபத்து மூன்று வயசு என்று சொல்லுவீங்க...

 திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூட இல்லை..

 இருந்தும் உங்கள் இருவருக்கும் இடையே அருமையான புரிதல் இருந்தது.

 அதனா‌ல் அம்மா ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விட்டாள் . 

 ஒவ்வொரு  நிமிடமும்உங்கள் முக‌ம் பார்த்து உங்கள் தேவையை பூர்த்தி செய்தாள்  அப்படி பண்ணின அம்மாவை கூட நீங்க நான் உன் கணவன். எப்போதும் நான் சொல்லுவது தா‌ன் செய்யனும்கிற மாதி‌ரி விரட்டுவீங்க. 

அப்படி நீங்க விரட்டினா கூட அம்மா உங்க வார்த்தைக்கு மதிப்பு குடுத்து உங்க சந்தோஷம்தான் அவ சந்தோஷம்னு வாழ்ந்தாப்பா . 

நீ‌ங்க‌ள் அம்மாவை திட்டியது போல....

 இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் நான் ஓரு முறை திட்டியிருந்தேன் என்றால்...

 என் திருமண உறவு  அன்றுடன்  முடிந்து இருக்கும் 

உங்களுடையது ஓரு இனிமையான தாம்பத்யம். ஈகோ ,அலட்டல் ,எதிர்ப்பு எதிர்ப்பார்ப்பு எதுவு‌ம் இல்லாத ஓரு அருமையான தாம்பத்யம். இப்போது நானு‌ம் உங்கள் மருமகளும் கல்யாணம்கிற பந்தத்துல இணைந்து இருக்கிறோம். 

என்னை பொருத்த வரை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நான் உன்னை கடைசி வரை காப்பாற்றுவேன் என்று சொல்லும் ஆணாக நானு‌ம்,  

உன்னை விட்டு எந்த ஜென்மத்திலும் பிரிய மாட்டேன் என்று சொல்லும் பெண்ணாக  அவளும் இருக்க வேண்டும்.  அதுதான் ஒரு திருமணத்தின் புரிதல்.

ஆனால் எங்கள் திருமணம் அப்படி பட்டது இ‌ல்லை...

 விடிந்து எழுந்தால் எங்களுக்குள் ஒரு ஈகோ clash.

ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அவள் இவனுக்கு என்ன நான் அடிமையா எ‌ன்று நினைப்பதும்... சம்பாதிக்கிற திமிருடன் இவ பேசுறா பார்த்தியானு என்னோட நினைப்பும்...

 கல்யாணம் ஆன இந்த 25 வருஷத்தில் துளி கூட மாறவில்லை. நா‌ங்க‌ள் எங்கள் வாழ்க்கையில் டெய்லி கத்தி மேல் தான் நடந்து கொண்டு இருக்கிறோம் .

எனக்கு  வயசு 55 அவளுக்கு... 50 வயசு .

இத‌ற்கு அப்புறம் பி‌ரிவு என்பதெல்லாம் அசிங்கம். atleast உங்கள் பேரன் வருணுக்காகவாவது நா‌ங்க‌ள் அட்ஜஸ்ட் செய்து தா‌ன் போக வே‌ண்டு‌ம் .அவளிடம் நீ‌ங்க‌ள் போய் கேட்டாலும் அவளும் இதையேதான் சொல்லுவாள்.

 எங்கள் தாம்பத்தியம் என்பது உங்களது போல் இல்லை. எனக்கு 29 வயசில் திருமணம் அவளுக்கு அப்போது 24வயசு  

 நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவ‌ர் புரிந்து கொண்ட பி‌ன் தா‌ன் திருமணம் எ‌ன்று சொல்லி எட்டு மாசம் பழகினோம்...

 அந்த எட்டு மாசத்தில் எல்லாமே made for each other ஆகத்தான் தெரிந்தது.  தாலி என்ற மஞ்சள் கயிறை அவள் கழுத்தில் கட்டியவுடன்...

 இவள் என்னவள் இனி எந்த முடிவும் அவ்வளவு ஈசி ஆக அவளால் தனியாக எடுக்க முடியாது, நாம தான் அவள் வாழ்க்கையின் முக்கியமான ஒருவன் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற ஆண் திமிரு எனக்கும்..

  ஐயோ இத்தனை difference of opinion  ஆ என்ன செய்ய . 

தாலி கட்டிக் கொண்டேன் எதாவது தவறான முடிவு எடுத்தால் தன் பெற்றார்க்கு‌ம் சுற்றி உள்ள உறவினருக்கும் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் அவளுக்கும். இப்போது சொல்லப் போனால் ஒற்றுமையான தாம்பத்தியம் என்னும் ஒரு அழகான நாடகத்தை நா‌ங்க‌ள் இருவரு‌ம் ஊரார் மெச்ச நடித்துக் கொண்டு இருக்கிறோம்.  

இதைதான் கத்தி மேல நடக்கிற மாதிரின்னு சொன்னேன்.

இதுதான்பா இன்றைய தாம்பத்தியம்.

அப்பா உங்களுடைய பசி , ருசி எ‌ல்லா‌ம் என் அம்மாவுடன் போச்சு. அதனால் நீங்களும் என்னை மாதிரி  கிடைக்கும் நேரத்தில் கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு வாழ பழக்கிக் கோங்க .

ஆனால் கடவுள் குடுத்த வரமான உங்கள் தாம்பத்யத்தை அசை போட்டு மிச்ச நாள்களை கழியுங்கள் அப்பா. 

வாங்க நேரம் ஆகுது போலாம் என்றான்.

அவன் கையை இறுகப்  பற்றி உண்மையிலே எங்கள் ஜெனரேஷன் குடுத்து வைத்தவர்கள்.  அருமையான மனைவி , மகன், தாத்தா ,பாட்டி ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்ட அழகான குடும்பம்.....

கடவுள் குடுத்த வரம் . 

நான் நீ வாழும் வாழ்க்கையை புரிந்து கொண்டேன்..

 உங்களை எல்லாம் பார்த்தால்உ‌ண்மை‌யிலேயே ரொம்ப பாவமா இருக்கு  . 

நான் இனி என்னை மாற்றிக் கொள்கிறேன். கவலைப் படாதே .

என்னால உன் குடும்பத்தில் பிரச்சினை வராது நிம்மதியாக இரு என்றார்.

இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம்..


வாழ்க்கை வாழத்தானே....

இப்படிக்கு, ஆபிரகாம் லிங்கன் !

 லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...  

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள். 

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு. 

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். 

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள் 

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள். 

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். 

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம். 

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

வீட்டு வைத்தியம் !

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.


சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.


தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.


பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.


குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

கவிழும் கப்பலின் அந்தரத்தில் !

 "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது.*l

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.

கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....

இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???"

என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

'நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாம கழிச்சிருக்கோம்' னு...

வாழ்க்கை குறுகியது, 

ஆனால் அழகானது...

சஹாதேவனின் ஜோதிடத்தை மாற்றிய பரமாத்மா ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

 சஹாதேவன் வருத்தமாக, அமர்ந்திருப்பதைக் கண்ட வாசுதேவர்

இளவரசே சஹாதேவா !!

நீ ஏன் வருத்தமாக இவ்வனத்தில் அமர்ந்திருக்கிறாய் !!

அத்தை  குந்தி பூஜைக்கு மலர்கள் கொய்யசென்ற ,உன்னை காணவில்லை என்ற வருத்தத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்.

உன் வருத்தத்திற்கு காரணம் என்ன உன்னை வணங்கிவிட்டு சொல்கிறாரே யார் அவர் ?

பணிகிறேன் வாசுதேவரே நம் அஸ்தினாபுரத்தின் பிரஜை அவர், தன் ஜாதகத்தை கணித்து, அவரின் திருமணத்திற்கு, ஒரு நல்ல முகூர்த்த நாள் குறித்து தரச் சொன்னார்.

அதற்காகவா வருத்தப்படுகிறாய் சஹாதேவா ?

இல்லை வாசுதேவரே! அவரின் ஆயுட்காலம் மிகவும் குறைவாக உள்ளது .

அதனால் நாளை வா கணித்துக்  கூறுகிறேன் என்று ,அவரை அனுப்பி விட்டேன்"

ஆனால் சஹாதேவா ! விதி முடிந்தால் அனைவரும் இப்புவியுலக வாழ்க்கையை முடித்துக் செல்லத்தானே வேண்டும்? இதில்  யாரும் விதிவிலக்கல்ல

ஏதாவது பரிகாரம் இருக்குமே !

கூற வேண்டியது தானே!! .சஹாதேவா.!

உண்மைதான் வாசுதேவரே! ஆனாலும் என் மனம் ஏதோ ஒன்றை எண்ணி ,கணக்கிறது.

அவர் முப்பிறவியிலும் எப்பாவத்திற்கும் ஆளாகாதவர் !

மேலும் ,அப்பிரஜை இப்பிறவியிலும் இம்மியளவு கூட ,அறநெறி தவறாது வாழ்ந்து வருபவர்.

இவர் போன்றோர் எல்லாம் காரணமின்றி இறக்க நேரிட்டால் ,அறநெறி போற்றி வாழ்ந்து என்ன பயன் வாசுதேவரே 

முதலில் பரிகாரம் என்னவென்று கூறு !

அவரின் ஆயுளை நீட்டிக்க முடிகிறதா? என்று பார்ப்போம்.

இயலாது வாசுதேவரே! 

நான் ஏற்கனவே, உங்களிடம்  பரிகாரத்திற்கான, நேரம் அவரிடம் இல்லை என்றேனே!

காலனையும் காலத்தினால் கணப்பொழுது காத்திருக்க வைக்க முடியும் சஹாதேவா ! 

பரிகாரத்தை முதலில் கூறு 

அவரின் ஜாதகத்தின்படி ஒரு கோயிலைக் கட்டி, குடமுழுக்கு அவரே செய்தார் என்றால் ,அவர் தீர்க்காயுள் பெற்று ,வாழ்வாங்கு வாழ்வார் . 

மேலும் அப்பிரஜையின் மரணம் இன்று நடு ஜாமத்தில் நிகழப்போகிறது.! 

எப்படி அவரால் இந்த பரிகாரத்தை நிறைவேற்ற முடியும் மாதவா!?

சஹாதேவா விதி பலன் எதுவோ அது நடக்கட்டும் அங்கு அத்தை குந்தி பூஜைக்காக காத்திருப்பார் செல்வோம் வா!

மறுநாள் அதிகாலையில் சஹாதேவன் அந்த பிரஜையை அரண்மனை வாயிலில் கண்டவுடன், ஆனந்த அதிர்ச்சியுற்றான்.

சஹாதேவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. 

நான் கணித்தது இதுவரை பொய்த்ததில்லையே !

அப்படி இருக்க இவர் எவ்வாறு உயிரோடு இருக்கிறார் ! 

இது எப்படி சாத்தியம் என்று எண்ண ஓட்டங்களில் மனம் மூழ்கியது.

ஹஸ்தினாபுரத்து பிரஜையே நேற்று நீங்கள் என்னை வந்து, சந்தித்து சென்றபின் நடந்தவற்றை மறைக்காமல் கூறுங்கள் என்றார் சஹாதேவன்.

இளவரசர் சகாதேவரே என் இல்லத்திற்கு திரும்பும் வேளையில்

கண்ணுக்கு புலப்படாத காரிருள் மேகங்கள் வானில் தோன்றி பகலவனை திடீரென மறைத்து விட்டான்.

பெரு மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது!! 

மின்னல் கீற்றுகள் வானை கிழித்துக் கொண்டிருந்தன!!!

இடியோசை காதால் கேட்க முடியாத அளவிற்கு இருந்தது.!!!

சூறாவளிக் காற்று சுழன்று அடித்தது

இறைவனை மனதில் எண்ணிக்கொண்டு, அங்கிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில், இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி ஒதுங்கினேன்.

கூர்ந்து கவனித்தேன் அது பாழடைந்த மண்டபம் அல்ல. 

சிதிலமடைந்த கோவில்

என் மனதில் கோயிலில் பழுதடைந்த பகுதிகளை கட்டுமான பொருட்களை கொண்டு சீர் செய்வதாக நினைத்து பார்த்தேன். 

கோவிலின் முழுத் தோற்றமும் குறையின்றி கண்ணுக்கு புலப்பட்டது. 

என் எண்ணங்களாலேயே கோயிலுக்கு வண்ணமிட்டு, கர்ப்பகிரகத்தை பிரதிஷ்டை செய்து ,கோயிலின் பணிகள் அனைத்தையும் முடித்து, குடமுழுக்கும் நடத்தி வைப்பது போன்ற நினைத்து பார்த்தேன்.

சற்றே அயர்ந்து விட்டேன் இளவரசே !

இரவு பொழுது நீங்கி கதிரவன் உதித்து விட்டான்.

என் இல்லத்திற்கு செல்லாமல் ,என் மண நாளை தங்களிடம் குறித்துக்கொண்டு 

பின் இல்லம் செல்லலாம் என்று தங்களைக் காண வந்துவிட்டேன் இளவரசே!

இதனைக்கேட்ட சஹாதேவன், ஆனந்த அதிர்ச்சியுற்று பிரஜையின் மண நாளை குறித்துக் கொடுத்து, அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அப்போது அங்கு புன்னகையுடன் வந்த பரமாத்மாவை வணங்கி!!

 வாசுதேவரே ! பரிகாரம் ஏதும் செய்யாமலே ,நேற்று நான் கூறிய பிரஜை வந்து மண நாள் குறித்து சென்றார்.

அது  எப்படி சாத்தியம் 

சாஸ்திரங்கள் பொய்த்தது இல்லையே? 

அப்புறம் எப்படி உயிரோடு உள்ளார் வாசுதேவரே?

சஹாதேவா அப்பிரஜை  நேற்று அவர் எங்கு இருந்தார்? 

என்ன செய்தார்?

சிதிலமடைந்த கோயிலில் அப்பிரஜை தங்கி, அதனை தன் நினைவாலேயே சீர் செய்து, குடமுழுக்கும் செய்திருக்கிறார் வாசு தேவரே !

சஹாதேவா கவனமாக கேள்!!! 

இறைவன் அவரின் அர்ப்பணிப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார் ; 

எவ்விதத்திலும் இறைவனை வழிபடலாம் ;

இறைவனை பற்பல வழிகளில் பக்தர்கள் ஆராதிக்கின்றனர்; அனைவரிடமும் எவ்விதத்திலும் பாகுபாடு பாராட்டாதவர் இறைவன்.

செல்வ செழிப்பில் திளைப்பவர் முதல் ஆண்டி வரை அனைவரும் இறைவனுக்குச் சமமானவரே .

அவர் பக்தர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபடுத்திப் பார்ப்பதில்லை.

நேர்த்திக்கடன்கள் பல்லாயிரக்கணக்கான முறைகளில் இறைவனுக்கு செலுத்தப்படுகிறது. 

அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து தான், அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ரட்சிக்கிறான் இறைவன். 

அதன்படி அப்பிரஜையின் மனக் கோயிலை ஏற்று  அவரின் ஆயுளை நீட்டித்து, இருக்கிறார் இறைவன்.

உண்மைதான்  வாசுதேவரே! அனைவரும் இறைவனுக்கு சமம்.

ஆனால் அப்பிரஜை கூறிய சிதலமடைந்த கோயில் இங்கு இல்லையே?

உண்மைதான் சஹாதேவா! அப்பிரஜை ஒதுங்கிய இடத்தை சிதிலமடைந்த கோயிலாக மனதில் எண்ணி, தன் எண்ணத்தினால் சீர் செய்து, குடமுழுக்கும் நடத்தியிருக்கிறார் "**

அவர் நிறுவியது மனக்கோயில்.

இதனை இறைவன் முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரின் ஆயுளை நீட்டித்து விட்டார். 

பக்தர்கள் விரும்பும் வண்ணம் எவ்விதத்திலும் இறைவனை வழிபடலாம் சகாதேவா! 

மனதில் சிதிலமடைந்த கோவில் தோன்ற ,வாசுதேவர் தான் காரணமாக இருக்க முடியும் என, சஹாதேவன் நினைக்க 

வாசுதேவரோ! சகாதேவனை பார்த்து, வதனச்சிரிப்பு சிரிக்க, பரந்தாமனின் அருளை எண்ணி, பணிந்து வணங்கினான் சஹாதேவன்.

பரமாத்மா நினைத்தால் ஷண நேரத்தில் நம் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்.


ஜெய் ஸ்ரீராம்

தொப்புள் !

 நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு.

62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்….

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். 

தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது….

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.

அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன….

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். 

தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட….

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. 

நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்…

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு,  முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்….

கண்கள் வறட்சி நீங்க, குறைந்த பார்வை சரியாக.. பளபளப்பான தலைமுடி பெற... மெருகூட்டப்பட்ட  சருமம் பெற...

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்…..

முழங்கால் வலி குணமடைய

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்….

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட, சருமத்திலிருந்து நிவாரணம் பெற...

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி  கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்….

தொப்புளில் ஏன் எண்ணெய் விட வேண்டும்?…

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். 

அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது….

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும்..