Thursday, 16 March 2017

நிலவேம்பு - Andrographis paniculata

 Scientific name: Andrographis Paniculata
Tmail: Siriyaa Nangai [சிறியா நங்கை], நிலவேம்பு
English: Green Chirayta

https://en.wikipedia.org/wiki/Andrographis_paniculata

காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோய் பூரண குணம் !!!


ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis Paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

மனஅழுத்தம் - மனவியல் ரீதியிலான தீர்வு.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.

Wednesday, 15 March 2017

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.

காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் - சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.

 உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.

 இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

Tuesday, 14 March 2017

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 வாய்ககால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....👇👇👇

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்-
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை  ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!
ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

A Good Read !

A Good Read!

*'நாம சாப்பிட  ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட  உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும்  நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை  நாம கழிச்சிருக்கோம்' னு...

#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது... 😊

Monday, 13 March 2017

தியானம் என்றால் என்ன ?

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்.
அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல
முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது, சிறுவன் பகவானை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.

தியானம் என்றால் என்ன?
பகவான்: சிரித்துக் கொண்டே அந்தச்
சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம்,
"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.

அதே மாதிரி
எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.

சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

சிறுவன் மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.

சிறுவனைச்
சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் பகவான்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன்
பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே
மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை.
தோசையோ சிறுத்து ஒரு சிறு
விள்ளலாக மாறியிருந்தது இப்போது.
சிறுவனும் அந்த விள்ளலில் கையை
வைத்தபடி
எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ,
அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்,

அடிநாதமாக இறைவன் மேல்
கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்.


புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.
கதை முடிந்தது.

பகவான் ஸ்ரீ ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும்,
சாவும் எனவும்,


இடைப்பட்ட காலத்தின் நேரமே தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.  அதில் பக்குவமுறும் காலமே வேறுபடுகிறது.