Wednesday, 23 August 2017

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க...

    மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள்.அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்..

இருட்டில் எதுவும் தெரியவில்லை.மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள்.ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்...
ஆனால் உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். 

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும். வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை. தூரத்தில் இருப்பது தெளிவாக  தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.
வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.
"அப்பா இங்கே பாருங்கள்,"..மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான். "அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

 அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். 

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.

Believe Yourself

         அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

   இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? 

   பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்புஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
   
   பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும் !

   நம்பிக்கையுடன் எதை தேடினாலும் நமக்கு கைகொடுக்கும்.

Be Positive

   ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்...
 .
  தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி...பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்...

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள். 
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.


Tuesday, 1 August 2017

மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்  அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?"

மாற்றங்கள் மனங்களிலும்   குணங்களிலும் வருவதே இனிதாகும்

Tuesday, 25 July 2017

Excellence is not for someone else to notice but for your own satisfaction



A German once visited a temple under
construction where he saw a sculptor making an idol of God...

Suddenly he noticed a similar idol lying nearby...
Surprised, he asked the sculptor, "Do you
need two statues of the same idol?"
"No," said the sculptor
without looking up, "We need only one, but the first one got damaged at the last stage..."

The gentleman
examined the idol and found no apparent damage...

"Where is the damage?" he asked.
"There is a scratch on the nose of the idol." said the sculptor, still
busy with his work....

"Where are you going to install the idol?"

The sculptor replied that it would be
installed on a
pillar twenty feet high...

"If the idol is that far who is going to know that there is a scratch on the nose?"
the gentleman asked.

The sculptor stopped work, looked up at the gentleman, smiled and said,

"I will know it..."

The desire to excel is exclusive of the fact whether someone else appreciates it or not....

"Excellence" is a
drive from inside, not outside....

Excellence is not for
someone else to notice but for your own satisfaction and efficiency.

Don't Climb a Mountain with an Intention that the World Should See You,
Climb the Mountain with the Intention to See the World

One of the Best msgs ever received 👏👏👏

Tuesday, 18 July 2017

வாழும் வரை வாழ்க்கை...

கொலுசின் விலை  ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய  முடியும்.
                      குங்குமத்தின் விலை மிகக்குறைவு.           
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை  திருத்துபவன் உண்மையான நண்பன்....

சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை  புகழ்பவன் நயவஞ்சகன்.

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்  உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள்  வேடிக்கையானவை,

பணக்காரன் உள்ளே சென்று  பிச்சை  எடுக்கிறான், ....
ஏழை வெளியில் நின்று  பிச்சை எடுக்கிறான்,...

ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு   பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட  கடவுளுக்கு பழைய சோறும், கிழிந்த துணியும்  கொடுப்பார்கள்.

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,

ஏனெனில்  பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,

இடையில் எல்லாம் நாடகம்.....

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.

பால்காரரைப் பார்த்தால்  பாலில் தண்ணீர்  ஊற்றுகிறார் என்று  சண்டையிடுவார்கள்,....

தண்ணீரில்  நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

மனிதனின் பிணத்தை  தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும்  மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து  விழா எடுப்பார்கள்.

இவ்வளவு  தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?

எது நமதோ அது வந்தே தீரும். 
யாராலும்  தடுக்கமுடியாது. 
நமதில்லாதது...நமக்கில்லாதது... எது செய்தாலும் வராது. யாராலும்  தரவும்  முடியாது. 

வாழும் வரை வாழ்க்கை...