Sunday, 18 June 2017

திருப்புமுனை ! - ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம்


   ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.
இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோ தானோவென்று வீடு கட்டினார்.

   ‘வேலையிலிருந்தே ஓய்வுபெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு! வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.

   வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி. மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

   🌼நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்!
  
   🌼நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.

   🌼ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனையை தரும் என்பது யாருக்குத் தெரியும்.

Saturday, 17 June 2017

B E H A V I O R is always Greater Than Knowledge

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Cold room அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...

இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.

அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.

இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்.

🍂__________🍂
          B E H A V I O R
             Is always Greater
          Than Knowledge,
         Because In Life There
           Are Many Situations
            Where Knowledge
           Fails But Behavior
                  Can Handle
             E V E R Y T H I N G.
🍂__________🍂

Thursday, 15 June 2017

ஒப்பிடுதல் என்பது மகிழ்ச்சியின் எதிரி

நான் காலையில் ஜாகிங் சென்றுகொண்டிருந்தேன்; அரை கிலோமீட்டர் முன்னால் ஒரு நபர் என்னை விட சிறிது மெதுவாக செல்வதை கவனித்தேன். அவரை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் செல்லும் பாதை திரும்ப இன்னும் ஒரு கிலோமீட்டர் இருந்தது. வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் மிகவும் நெருங்கி விட்டேன்; என் வேகத்தை இன்னமும் அதிகப்படுத்தினேன்.

அக்காட்சியை கண்டவர்கள், நான் ஒலிம்பிக் போட்டியில் இறுதிக் கட்டத்தில் ஒடுவதாக எண்ணியிருப்பார்கள். அவரை பிடித்து விடுவதில் மிகவும் கவனமாக இருந்தேன்.கடைசியாக அவரை பிடித்துவிட்டேன். மனதினுள் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி! ஆனால், நான் போட்டி போட்ட நபருக்கு அந்த விஷயமே தெரியாது!

அவரை கடந்து சென்ற பிறகு தான், நான் திரும்ப வேண்டிய இடத்தை தாண்டி வந்ததை உணர்ந்தேன்.அப்பொழுதுதான் எனக்கு ஒரு பேருண்மை புரிந்தது…

வாழ்க்கையிலும் இப்படித்தான்… நாம், குடும்பத்தினருடனும், சக ஊழியருடனும், நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறோம்… அல்லது அவர்களை விட செல்வாக்கிலும், வசதிகளிலும் பெரியவராக காட்ட விரும்புகிறோம்… இந்த போராட்டத்தில், நம்மை சுற்றி நடக்கும் சந்தோஷங்களை அனுபவிக்க மறந்து விடுகிறோம்…

நாம் நமது நேரத்தையும் ஆற்றலையும் தேவை இல்லாத போட்டிகளில் கழித்து, நமது வாழ்வின் இலட்சியத்தின் பாதையை மறந்து விடுகிறோம். இந்த ஆரோக்கியமற்ற போட்டி ஒரு முடிவில்லாத சுழற்சியாகும்.

எப்பொழுதும், யாரோ ஒருவர் உங்களை விட ஒரு நல்ல வேலையோ, நல்ல வாகனமோ, வங்கியில் அதிக பணமோ, அதிக கல்வியோ, அழகிய மனைவியோ, நல்ல கணவரோ, சிறந்த குழந்தைகளோ, சிறந்த சூழ்நிலையிலோ இருக்கக்கூடும்… 'நீங்கள் யாருடனும் போட்டியிடாதபோது, உங்கள் முழு திறமையையும் வெளியே கொண்டு வந்து மிக சிறந்தவராக இருக்க முடியும்.

*சிலர் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதற்க்கு காரணம்… மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள், என்ன அணிகிறார்கள், எந்த வண்டி ஓட்டுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதே… உங்களிடம் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்று கொள்ளுங்கள்… உயரம், நிறம், வசதி, வாய்ப்பு … வாழ்க்கையில் விதியின் மீது போட்டி இல்லை…

Wednesday, 14 June 2017

26 எழுத்துக்கள் தரும் அற்புத வார்த்தைகள் !

A - Appreciation

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.


B - Behavior

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.


C - Compromise

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.


D - Depression

மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.


E - Ego

மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.


F - Forgive

கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.


G - Genuineness

எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.


H - Honesty

தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.


I - Inferiority Complex

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.


J - Jealousy

பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.


K - Kindness

இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.


L - Loose Talk

சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.


M - Misunderstanding


மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.


N - Neutral

எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.


O - Over Expectation


அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.


P - Patience

சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.


Q - Quietness

தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.


R - Roughness

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.


S - Stubbornness

சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.


T - Twisting

இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.


U - Underestimate

மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.


V - Voluntary

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.


W - Wound

எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.


X - Xerox

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.


Y - Yield

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.


Z - Zero

இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

Friday, 9 June 2017

விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

Thursday, 8 June 2017

இறைவனே நம்மை தேடி வருவார்......🙏🏻



தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை... ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே...

இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்...

நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால் இறைவன் தான் உன்னை வந்து  அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான்...

பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா.

அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.
முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...

அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்.

பல அறச் செயல்களைச் செய்கிறான்.

இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்.

அல்லது

அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.

அவனோடு உரையாடுகிறார்...
பாராட்டுகிறார்....
பரிசுகள் தருகிறார்.

இது நடக்கும் இல்லையா?”

“நிச்சயமாக நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.

நீதான் அவன்.

நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்.
ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்...

அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.

இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு...

இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

நம்
எண்ணங்களும்...
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...

நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...

நல்லது செய்யுமெனில்...

இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...

இறைவனே நம்மை தேடி வருவார்...


இனி வரும் அனைத்து நாட்களும்...
இனிய நாளாக அமைய இறைவன் அருள் புரிவார்...

Thursday, 1 June 2017

Our troubles is a stepping stone, Never Give Up !


One day a farmer's donkey fell down into a well. The animal cried piteously for hours as the farmer tried to figure out what to do. Finally, he decided the animal was old, and the well needed to be covered up anyway; it just wasn't worth it to retrieve the donkey.

He invited all his neighbors to come over and help him. They all grabbed a shovel and began to shovel dirt into the well. At first, the donkey realized what was happening and cried horribly. Then, to everyone's amazement he quieted down.

A few shovel loads later, the farmer finally looked down the well. He was astonished at what he saw. With each shovel of dirt that hit his back, the donkey was doing something amazing. He would shake it off and take a step up.

As the farmer's neighbors continued to shovel dirt on top of the animal, he would shake it off and take a step up. Pretty soon, everyone was amazed as the donkey stepped up over the edge of the well and happily trotted off!*

Life is going to shovel dirt on you, all kinds of dirt. The trick to getting out of the well is to shake it off and take a step up. Each of our troubles is a steppingstone. We can get out of the deepest wells just by not stopping, never giving up! Shake it off and take a step up..


Remember the five simple rules to be happy:
  •     Free your heart from hatred - Forgive.
  •     Free your mind from worries - Most never happens.
  •     Live simply and appreciate what you have.
  •     Give more.
  •     Expect less from people but more from God.