கணியன் #பூங்குன்றனார்
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.
முழு பாடலும் அதன் பொருளும்👇.
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,
முனிவின் இன்னாது என்றலும் இலமே
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
பொருள்👇
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எல்லா ஊரும் எனது ஊர்.
எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று
வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
'தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.
"நோதலும் தனிதலும்
அவற்றோ ரன்ன"
துன்பமும் ஆறுதலும் கூட
மற்றவர் தருவதில்லை.
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.
"சாதல் புதுமை யில்லை"
பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது
இயற்கையானது.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்
எதற்கும் அஞ்சாமல்
வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.
"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே"
இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்ன ஆகும் என்று
எவர்க்கும் தெரியாது.
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்.
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.
"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"
இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது.
நாம் வாழ
மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் அது அது
அதன் பணியை செய்கிறது.
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,
வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்.
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.
"ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
இந்த தெளிவு
பெற்றால்,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு
அவற்றில் அவரவர்கள்
பெரியவர்கள்.
No comments:
Post a Comment