கணவன் : ஹலோ சொல்லுடா தங்கம்...
மனைவி : ஏங்க இன்னைக்கு தேதி என்னங்க?
கணவன் : இன்னைக்கு தேதி 6. ஏன்மா..?
மனைவி : ஒன்னும் இல்ல. வைங்க..
கணவன் : பதற்றம் அடைந்தவனாக அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே.. என்ன ஆச்சோ தெரியலயே..😳
Eb பில் கட்டியாச்சு,
பால் பணமும் கொடுத்தாச்சு,
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு,
கேபிள் பணமும் கொடுத்தாச்சு....!!!
தன் அம்மாவுக்கு போன் பண்றான்..
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ??
அடுத்த மாசம் டா. ஏன் ??
ஒன்னும் இல்ல. வை..
மாமியாருக்கு போன் பண்றான்..
அத்தை.. மாலாவுக்கு பிறந்தநாள் எப்போ??
12வது மாசம்தான் மாப்ள. ஏன்.????
சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன்..
தன் மகனுக்கு போன் பண்றான்..
அம்மா ஏதும் பாத்திரத்த ஒடைச்சாளா..??
இல்லப்பா..
கோபமா இருக்காளா??
இல்லப்பா..
என்ன பண்றாள்..
டீவீ பாக்குறாங்கப்பா.
சரி வை...
மனைவிக்கு போன் பண்றான்..
தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட??
ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிளிக்கல அதான் கேட்டேன்..
சரிடா வைச்சிட்றேன்...
பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதறவெச்சிட்டு...😜😜😜😜😜😜😜
No comments:
Post a Comment